கலெக்டர் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

சி எஸ்ஆர் நிதியை சரிவர பெற்று தருவதில்லை என கலெக்டர் அதி காரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரியாக ஒன்றியக்குழு கூட்டத்தில் புகார் தெரிவித்தனர் மேலும் இதனை கண்டித்து உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் துணை தலைவர் தமிழ் செல்வி பூமிநாதன், ஆணை யாளர் ராமகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தீர்மானங்களை மேனேஜர் வாசித்தார்.
கவுன்சிலர் சுமித்ராகுமார் நமது ஒன்றியத்திற்கு வரவேண்டிய சிஎஸ்ஆர் நிதி இதுவரை சரிவர வரவில்லை ஏன் கிடைக்கவில்லை இதனால் எந்த திட்டமும் ஒன்றிய த்தில் நடைபெறவில்லை என குற் றம் சாட்டினார். அதன்படி சுமார் 110 கோடிக்கு மேல் சிஎஸ்ஆர் நிதி வரவேண்டியுள்ளது இதனைப் பெற்று தரவேண்டிய மாவட்ட ஆட் சியர் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை மற்றும் அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதே இல்லை இதனால் திட்டப்பணிகள் எதுவும் செய்ய முடியாமல் ஒன்றியத்தில் கவுன்சிலருக்கு மரியாதை இல்லா மல் பெரும் அவதிக்குள்ளாகிறது. இதை தொடர்ந்து அனைத்து கவு ன்சிலர்களும் சரமாரி கலெக்டர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனை கண்டித்து உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவி த்தனர். இதனால் ஒன்றியக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர் சுமத்திரா குமார் அண்ணாமலைச்சேரி பகுதியில் மழைநீர்வடிகால்,குப்பம் பகுதியில் சமுதாயக்கூடம்,வெப்பத்தூர், பூவாமி சுடுகாடு பகுதியில் உயர் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கவுன்சிலர் செல்வழகி எர்னாவூரான் லைட் ஹவுஸ் திருமலை பகுதியில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது இதனால் கடலோர பகுதியி ல் உள்ள பழைய கட்டடத்தில் பாது காப்பு இன்றி மாணவ மாணவிகள் பயில்கின்றனர் எனவே புதிய கட்டி டம்கட்டவேண்டும், எனது கவுன்சில் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்து வர்கள் இல்லை,அடிப்படை வசதி இல்லை இதன் மீதுநடவடிக்கை எடுக்கவும் என தெரிவித்தார். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu