சிறுவாபுரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம்

சிறுவாபுரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம்
X

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பாலாலயம் நடைபெற்றது.

Siruvapuri Bala Murugan Temple- சிறுவாபுரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டு பாலாலயம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Siruvapuri Bala Murugan Temple- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தின் முன்னோட்டமாக மூலவர் சன்னதியை புனரமைப்பதற்காக பாலாலயம் நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு புனரமைப்பு பணிகளுக்காக மூலவர் சன்னதி மூடப்பட்டது. தொடர்ந்து அத்திப்பலகையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். மேலும் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தவுள்ள சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தேறியது.

இதில் காஞ்சிபுரம் பெருநகர் குருக்கள் பாலாஜி சிறுவாபுரி முருகன் கோவில் தலைமை குருக்கள் ஆனந்தன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சந்துரு ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ஆகியோர் உட்பட பூஜையில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!