சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டிபந்தக்கால் நடும் விழா
சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றடன் ஆகம விதிப்படி 12ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 19ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக யாகசாலை அமைக்க கால்கோல் நடும் விழா நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் யாகசாலைக்கான கால்கோல் மற்றும் ஆலய கோபுரத்திக்கான கால்கோல் நடப்பட்டது. தற்போது முதல் ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 1ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி தொடந்து 5நாட்கள் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆவணி 5ஆம் தேதி ஆகஸ்ட் 21ஞாயிற்றுகிழமை காலை 9மணிமுதல் 10.30மணிக்குள்ளாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆலயத்தில் குருக்கள் ஆனந்த், செயல் அலுவலர் செந்தில்குமார், மற்றும் பொதுமக்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu