சிறுவாபுரி முருகன் கோவிலில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
Siruvapuri Murugan Temple
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையிலும், காத்திருப்பு மண்டபத்திலும் சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பக்தர்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
Siruvapuri Murugan Temple
செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர்.
Siruvapuri Murugan Temple
இதுகுறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கையில் பிரசித்தி பெற்ற ஸ்தலமான இந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தும் நேர்த்திக்கடனை சிரித்து சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்வதாகவும் பித்தகை பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருத்தளத்திற்கு செல்லும் சாலையில் இரு புறம் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் கோவிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் வயதான முதியோர்கள் வெயிலில் நின்றும் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு தரிசனம் செய்வதாகவும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu