சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.71 லட்சத்து 32 ஆயிரம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.71 லட்சத்து 32 ஆயிரம்
X

உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்கள்.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணம் 71 லட்சத்து 32 ஆயிரம் என ஆலய நிர்வாகம் அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகப்பெருமானை வணங்கிவிட்டு காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துவது வழக்கம்.

2மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என 150பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 71லட்சத்து 32ஆயிரத்து 801ரூபாயும், தங்கம் 127 கிராமும், வெள்ளி 4கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாபுரி முருகன் கோவிலில் வரும் 21ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!