சிறுவாபுரி பாலசுப்ரமணியன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடத்தப்படும்
சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்று வரும், திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலின் குடமுழுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்தப்படும். பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள பாழடைந்த கோவில்கள் புனரமைக்கப்டும். நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கும் பணிகள் தொடரும் என்றார் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சோழவரம் ஒன்றியத்திறகு உட்பட்ட சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆகம விதிப்படி 12ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்று வரும், திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இந்த ஆய்வு பணிகளை அமைச்சர் மேற்கொண்டார்.
அப்போது பக்தர்கள் நிதியுதவியில் கோயிலை சுற்றிலும் கருங்கற்களால் நடைபாதை அமைக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும், ஆகம விதிப்படி 2015ஆம் ஆண்டே கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்தத பிறகே தற்போது இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 58லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம், 3கோடியே 75லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் திருக்குளம் சீரமைப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும். நெடுவரம்பாக்கம் கிராமத்தில் 1000ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் தனியாரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு முறையாக ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் ஆணை பெற்று அதற்கு பிறகு கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும். 100ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள் தொல்லியல் துறை அனுமதி பெற்று புனரமைக்கப்படும். பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள பழமையான மெதூர், பழவேற்காடு, மீஞ்சூர் கோயில்கள் ஆய்வு செய்து புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu