பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்

பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்
X

பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு சார்பில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு சார்பில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய திடலில் மத்திய அரசு நேரு யுவ கேந்த்ரா மற்றும் பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு சார்பில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம் வேல்கம்பு பயிற்சி முகாம் பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு செயலாளர் பகவதிசந்திரசேகரன் தலைமையில் கடந்த 13 ஆம் தேதி துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிலம்பம் புதிய வெல்கம்புகள் வழங்கி வாழ்த்தினர்.

பின்னர் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் நிர்வாகி பொன்னேரி சூரியா மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயில்வதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். இதில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் கார்த்திக், ஊராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ், மற்றும் கிராம பொதுமக்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!