பொன்னேரியில் மின்மாற்றி அமைத்து தரக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

பொன்னேரியில் மின்மாற்றி அமைத்து தரக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
X

பொன்னேரி மின்வாரிய அலுவலகம் முன் பேராாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர்.

பொன்னேரியில் மின்மாற்றி அமைத்து தரக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் ஊராட்சி அடங்கிய பொழுதுவிடிஞ்சாமேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மின் இணைப்பு சரியாக வராத காரணத்தால் புதிய மின் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்திருந்தது. பட்டியலின மக்களுக்கும் மின் இணைப்பைக் கொண்டு போவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து பொன்னேரி மின்வாரிய அலுவலகம் முன்பு ஈழப்போராட்டம் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தில் சார்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் தேவராசு, கொள்கைபரப்புச் செயலாளர் அருள்தாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இரண்டு மூன்று நாட்களில் முடித்து தருவதாக மின்வாரிய அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இப் போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் மின்வாரிய அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!