அகத்தீஸ்வரர் கோவிலில் ஏழாம் நாள் நவராத்திரி விழா!
பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி.20க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதமாடி பார்வையாளர்களை அசத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஏழாம் நாளான நேற்று மாலை அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண, வர்ண மலர்களால்,திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அபிநய நாட்டிய கலைக்கூடத்தின் மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.இதில் முறையாக பரதம் பயின்ற 21.மாணவிகள் கால்களில் சலங்கை அணிந்து ராகம் தாளத்திற்கேற்ப அபிநயம் பிடித்து மூத்த முதற்கடவுள் விநாயகர், அம்பாள், சிவபார்வதி, கிருஷ்ண பெருமான் சுவாமி ஐயப்பனை போற்றி பம்பரம்போல் சுழன்று நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
இதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று அசாத்திய திறமையை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நாட்டியக்கூடத்தின் மாணவிகள் நவராத்திரி விழாவில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவைய்யாறு உள்ளிட்ட பிரசித்திபெற்ற சிவாலயங்களில் நாட்டியமாடி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu