பழவேற்காட்டில் படகு மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

பழவேற்காட்டில் படகு மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியின் போது படகில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூனங்குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது படகு ஒன்றில் தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து படகு மூலமாக ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசியை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சிறிய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிற்கு படகு மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற படகு உரிமையாளர், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!