செவிட்டு பணப்பாக்கம் ஏரியில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சட்டவிரோதமாக செவிட்டு பணப்பாக்கம் ஏரியில் மண் அள்ளிய டிராக்டரை ஆரணி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகாமையில் ஆரணி அடுத்துள்ள செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக சவுடு மணல் அள்ளுவதாக வந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கனிமவளத் துறை அதிகாரியை பார்த்த டிராக்டர் ஓட்டுனர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதனை அடுத்து கனிம வளத்துறை அதிகாரிகள் டிராக்டர் பறிமுதல் செய்து, ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!