தி.மு.க.வில் தான் சனாதன கொடுமை: பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு

செய்தியாளர்களை சந்தித்தார் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி.
பா.ஜ.க.வை விட ஏற்றத்தாழ்வு பாகுபாடும் சனாதனமும் தி.மு.க. விடம் அதிகம் உள்ளதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட தத் நமச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்த பட்டியல் இன மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவர்கள் இடையே பாகுபாடு பார்ப்பதாகவும், எஸ்.டி பிரிவு மாணவர்களை புறக்கணித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார், பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் பள்ளியின் தலைமை ஆசிரியை தொடர்ந்து எஸ்டி மாணவர்களை சுத்தமாக வரவில்லை என்றும், திறமை இல்லை என கூறியும் புறக்கணித்து வருவதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திறமையற்ற மாணவர்களை திறமை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியரின் கடமை என்றும், சுத்தமாக வரவில்லை என்றால் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்த வேண்டுமே தவிர அவர்களை ஒதுக்கி தள்ளுவது ஆசிரியர் பணிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பூவை ஜெகன் மூர்த்தி பா.ஜ.க.வில் சனாதனம் உள்ளதாகவும் அல்லது பிராமண ஜாதியில் சனாதானம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.வில் தான் அதிக அளவில் ஏற்றத்தாழ்வுகளும் சனாதனமும் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் தன்னால் அதை கூற முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் பட்டியல் இன மாணவர்கள் பிரச்சனை தொடர்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட போவதாகவும் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu