திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல்
X

சோழவரம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழா

சோலையம்மன் ஆலயத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் ஊராட்சி சோலையம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோலையம்மன் ஆலயத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

இத்திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கே.ஆர்.வி.கல்வி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் பாஜக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்களுடன் இணைந்து செங்கரும்புடன் பொங்கல் வைத்து படையலிட்டு சூரியபகவானை வழிப்பட்டனர்.

பின்னர் திருநங்கைகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு புடவை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை யாற்றினர். மேலும் இவ்விழாவில் பாரம்பர்யம் மிக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் மாவட்ட பொது செயலாளர் நரேஷ்குமார், மகேந்திரன், பெருமாள், விக்கி, புவனா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!