பொன்னேரியில் பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் சலங்கை பூஜை விழா

தமிழ் கலையின் முக்கிய கலையான பரத நாட்டிய சலங்கை பூஜை விழா பொன்னேரியில் நடைபெற்றது. மகாதேவாய நாட்டியப் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவிகள் ஏழு பேர் சலங்கை அணிந்து நடனம் ஆடினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மகாதேவாய நாட்டிய பள்ளியின் இரண்டாவது பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் மாணவிகள் முதன் முறையாக சலங்கை அணிந்து ஆடியது காண்போரை கவர்ந்தது. தமிழ் கலையின் முக்கிய கலையான பரதநாட்டியம் பயிலும் மாணவர்கள் நாட்டிய கலையை கற்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சலங்கை அணிந்து ஆடும் நிகழ்வே சலங்கை பூஜை விழாவாகும்.
நாட்டிய பள்ளியில் பயின்று வரும் ஏழு மாணவிகள் முதன் முறையாக சலங்கை அணிந்து ராகம், தாளம், சுதியோடு ஆடி காண்போரை வியக்க வைத்தனர். மகாதேவாய நாட்டிய பள்ளியின் குரு பூஜா பயிற்றுவித்தலில் புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், அலாரிப்பு, கீர்த்தனை உள்ளிட்ட நாட்டிய உருப்படிகளுடன், இராகமாலிகை, திஸ்ரம், ஆரபி போன்ற ராகங்களோடு ஆதி, ரூபகம், மிஸ்ரபம் உள்ளிட்ட தாளங்களுக்கு ஏற்ப பார்வையாளர்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக நடனமாடினர்.
நாட்டிய பள்ளியின் மாணவிகள். இந்த சலங்கை பூஜை நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக இரண்டு வருடங்கள் கழித்து பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறும். இதன் முன்னோட்டமாகவே இந்த சலங்கை பூஜை விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற உள்ளதால் மாணவிகள் உற்சாகத்துடன் நடனமாடினர். இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu