Running Train Murder சென்னை அருகே ஓடும் ரயிலில் சொத்து தகராறில் ஒருவர் கொலை

Running Train Murder    சென்னை அருகே ஓடும் ரயிலில்   சொத்து தகராறில் ஒருவர்  கொலை
X
Running Train Murder பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதியில் சொத்து தகராறில் ஓடும் ரயிலில் தனியார் கொரியர் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்

Running Train Murder

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு காந்தி தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் ( வயது 44). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். முரளிகிருஷ்ணனின் பெரியப்பா மகனான ரவீந்திரன் ( வயது 38) இவரது வீட்டின் அருகே வசித்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினருமான ரவீந்திரனுக்கும் இடையே சொத்து தொடர்பாக கடந்த 5.வருடங்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல முரளிகிருஷ்ணன் வேலைக்கு செல்வதற்காக அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்து சென்னைக்கு செல்லும் புறநகர் ரயிலில் ஏறிய நிலையில் ரவீந்திரனும் அதே ரயிலில் ஏறி தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிகிருஷ்ணனின் நெற்றியில் ரவீந்திரன் பலமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முரளிகிருஷ்ணன் அடுத்த ரயில் நிலையமான அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் இறங்கி மயங்கி கீழே விழுந்தார். இதனால் சென்னை செல்லும் புறநகர் ரயில் சிறிது நேரம் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது

. இந்த சம்பவத்தைக் கண்ட சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் ரவீந்திரனை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் முரளிகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கொலை செய்யப்பட்ட முரளிகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளி ரவீந்திரனை கைது செய்து இரு குடும்பத்திற்கு இடையேயான சொத்து தகராறு குறித்தும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story