ரோட்டரி கிளப் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

ரோட்டரி கிளப் சார்பில் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் ௫௦ கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
Rotary Club Sponcered Nutrient Things
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட 50 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து மாவு, பேரிச்சம் பழம், மற்றும் பிறக்கும் குழந்தைக்கு புதிய ஆடைவழங்கும் நிகழ்ச்சியானது ஆண்டார் குப்பம்,ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
கர்ப்பிணிகள் வழக்கம்போல் உண்பதை விட சற்று சத்தான பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை தருவர். ஆனால் ஒரு சில ஏழைப் பெண்களால் அத்தகைய சத்தான பொருட்களை வாங்க இயலாத ஏழ்மை நிலையில் இருப்போர் என்ன செய்வர். இதனைக் கருத்தில் கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களான அரிமா, ரோட்டரி, ஜேசிஸ் உள்ளிட்ட நிறுவன அமைப்புகள் மாதந்தோறும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்வானது தமிழகத்திலுள் ளஅனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகிறது . இந்நிலையில் பொன்னேரி அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் திலக் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கினார்.இதில் சென்னை ரோட்டரி கிளப்,மாதவரம், தலைவர் ரவிச்சந்திரன் ஜெயராமன்,சென்னை நாடி ரோட்டரி கிளப் தலைவர் ஸ்ரீனிவாசன்,சென்னை ரோட்டரி கிளப் மாதவரம் மில்க்காலணி தலைவர் சரவணன் மற்றும் அனைத்து ரோட்டரி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை பேராசிரியர் சதிஷ் சிறப்பாக செய்திருந்தார்.
இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் தெரிவிக்கையில் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், தங்களுக்கு இத்தகைய பொருட்களையும் வழங்கிய அனைத்து ரோட்டரி கிளப் நிர்வாக சங்க நிர்வாகிகளுக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கர்ப்பிணி பெண்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu