பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை

பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை
பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி திருப்பாலைவனம் கிராமத்திற்கு உட்பட்ட அண்ணாமலை சேரி கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மனைவி குணசுந்தரி(61). இவர் தன் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளின் பிரசவத்திற்காக குணசுந்தரி வீட்டை பூட்டி விட்டு தன் மகள் வீட்டிற்கு சென்றார்.

மகள் வீட்டில் இருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்ற நிலையில் குணசுந்தரி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து குணசுந்தரி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குணசுந்தரி வீட்டை கொள்ளையர்கள் பல நாட்களாக நோட்டமிட்டு இருந்துள்ளனர். மகள் வீட்டிற்கு சென்றவர் மகளின் பிரசவம் முடிந்து வர பல நாட்கள் ஆகும் என கணித்து கச்சிதமாக தங்கள் வேலையை முடித்து உள்ளனர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படை யில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story