மீஞ்சூர் அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மாவார்பாளையம் செல்லும் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை, கம்மாவார்பாளையம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சாலையில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதன் காரணமாக சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியும், அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை சீர்படுத்த கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் நாலூர் அண்ணா நகர், ஜெயராம்புரம், பகுதி மக்கள்நூற்றுக்கு மேற்பட்டோர் நாலூர் ஏரிக்கரை கம்மாவார் பாளையம் சாலை அண்ணா நகரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான சிறிய முதல் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலை முழுவதும் பழுதடைந்து பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும நடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி பள்ளங்களில் சிக்கி காயம்பட்டு வருவதாகவும், சில நேரங்களில் உயிர் இழப்பு ஏற்படுவதாகவும் இதனை சீர் செய்ய பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உடனடியாக சாலையை அமைத்தால் மட்டுமே தாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த போலீசார் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story