விவசாய நிலத்தில் பேருந்து நிறுத்தம் அமைப்பதை கண்டித்து சாலை மறியல்
விவசாயின் நிலத்தில் பேருந்து நிறுத்தம் அமைப்பதை கண்டித்து நடைபெற்ற சாலை மறியல்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவருக்கு கிருஷ்ணாபுரத்தில் 33 செண்ட் அளவில் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் சம்மந்தமாக இவரது உறவினருடன் சர்ச்சை ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இடத்தின் முன்பகுதியில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பேருந்து நிறுத்தம் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. இதை அறிந்த நரசிம்மன் தனது நிலத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால் நேற்று திடீரென சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த நரசிம்மன், இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் இருதரப்பினரையும் அழைத்து பேசிய காவல்துறையினர் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், அந்த இடத்தில் வேறு எந்த மாற்றமும் செய்ய கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதையும் மீறி இன்று காலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் தூண்டுதலின் பேரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி மகேந்திரன் மற்றும் வட்டாட்சியர் நேரடியாக சென்று மீண்டும் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளை தொடங்க பணியாட்களுடன் அங்கு வந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த நரசிம்மர் அவர்களுடன் வாக்குவாத ஈடுபட்டு தனது சொந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க கூடாது என இது பிரச்சனைக்குரிய நிலம் என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் நெடுஞ்சாலை துறை இடம் முறையாக என் ஒ சி கடிதம் பெறாமல் திடீரென பேருந்து அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நரசிம்மன் கூறுகையில் இந்த இடம் எனது மூதாதையரின் பூர்வீக சொத்தாகும் அதில் தனக்கும் தனது உறவினர் ஒருவருக்கும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.இந்த சூழ்நிலையில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகரின் தூண்டுதலின்பேரில் தன்னுடைய இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், இதனை நாங்கள் விட மாட்டோம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் விவசாயிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu