ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியில் மூதாட்டி சிக்கி உயிரிழப்பு

ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியில்  மூதாட்டி  சிக்கி உயிரிழப்பு
X

தாறுமாறாக ஓடிய லாரி விபத்தில் பலியான சம்பூர்ணம் .

Road Accident One Perosn Dead சோழவரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடிய லாரி அடியில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு மற்றவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

சோழவரம் அருகே தாறுமாறாக ஓடி கடைக்குள் புகுந்த லாரி. சாலையில் நடந்து சென்ற மூதாட்டி லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். கடையின் சுவர் இடிந்து விழுந்ததில் கடை உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாரி ஓட்டுனர் பொதுமக்களிடம் சிக்கியதால் கடும் அவதிப்பட்டார்.



நெற்குன்றத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கடைக்குள் புகுந்தது. இதில் சாலையில் நடந்து சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சம்பூர்ணம் (வயது 75) என்ற மூதாட்டி லாரியின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கடையின் சுவர் இடிந்து விழுந்ததில் கடை உரிமையாளர் குணா ( வயது 45) காயமடைந்தார். உடனடியாக கிராம மக்கள் கடை உரிமையாளர் குணாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரி ஓட்டுனரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரை சடலத்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்திற்குள் அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் செல்வதாகவும், மதுபோதையில் ஓட்டுநர் லாரியை இயக்கியதே விபத்திற்கு காரணம் எனவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் குமரவேல் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறாக ஓடிய லாரி கடைக்குள் புகுந்ததால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future