சோழவரம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
சோழவரம் அருகே 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
சோழவரம் அருகே போலிபட்டா மூலம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு. வருவாய்த்துறை காவல்துறை உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் நிலத்தை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஓரக்காடு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் 14.5 ஏக்கர் நிலத்தை ஜெயா சோப் வொர்க் தனியார் நிறுவனம் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ளதாக ஊராட்சி மன்ற மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமணன் தீர்மானம் இயற்றி உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியின் மூலம் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியரின் விசாரணைக்குப் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொன்னேரி துணை வட்டாட்சியர் சீனிவாசன், சோழவரம் வருவாய் ஆய்வாளர் மதன்குமார், நில அளவர் பிரேம்குமார், குமார் கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா, ஜாகீர் உசேன்,மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மற்றும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்க்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu