பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
X
பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

பழவேற்காட்டில் கள்ளுக்கடை மேடு பழங்குடி கிராம மக்களுக்கு பட்டா இடம் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வழங்காமல் இருப்பதை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் உட்கோட்ட நீதிபதியான பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளார்.


ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராம்நாதனிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story