ரோட்டினை சீரமைக்க கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
Public Demanded Renovation Of Road
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த விடத்தண்டலம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதி மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு விடதண்டலம் கிராமத்தில் இருந்து மெதூர் வந்து பொன்னேரிக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதாக கூறி பொதுமக்கள் மெதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தின் போது மெதூரில் மழை பெய்த நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public Demanded Renovation Of Road
மழையையும் பொருட்படுத்தாமல் சற்றும் தளராமல் கூடி நின்று போராடிய பொதுமக்கள்
குண்டும் குழியுமான சாலைகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாகவும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சாலை சரியில்லாததால் தங்களது கிராமத்திற்கு பேருந்தும் இயக்கப்படுவதில்லை எனவும் அவசர தேவைகளுக்கு அழைத்தால் ஆம்புலன்ஸ் வாகனமும் கிராமத்திற்கு வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் எனக் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public Demanded Renovation Of Road
கொட்டும் மழையில் நனைந்துகொண்டு ரோட்டிற்காக ரோட்டில் நின்று போராடிய பொதுமக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்கள் சார்பில் பிரதிநிதிகளை சென்னை நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று சாலை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu