Public Demand Complete Underground Drainage Work பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மரணக்குழிகளை மூட பொதுமக்கள் கோரிக்கை

Public Demand Complete Underground Drainage Work  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட   மரணக்குழிகளை மூட  பொதுமக்கள் கோரிக்கை
X
Public Demand Complete Underground Drainage Workபொன்னேரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து வருகின்றனர்.

Public Demand Complete Underground Drainage Work

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள ராட்சத பள்ளங்களால் வணிகர்கள் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதோடு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் விபத்துஏற்படும் முன் செய் யவேண்டும் என்பதே ஒட்டு மொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில். சுமார் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வசதிக்காக மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் நகரின் முக்கிய சாலைகள் மோசமாகிப் போனது. நகரில் ஆங்காங்கு தோண்டப்பட்டுள்ள ராட்சத பள்ளங்களால் வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்

.கடைகளின் வாசலில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மூடப்படாததால் கடைகளை திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். . தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கும் இந்த சூழ்நிலையில் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இரவு நேரங்களில் இந்த இடங்களில் வாகனங்களில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது. கனமழை பெய்யும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி பொதுமக்களை அபாயத்திலிருந்து காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
future ai robot technology