பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
X

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவர் இன மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மலைகுறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் மலைக்குறவர் இன மக்கள் காலாகாலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, கல்வி உதவித்தொகை, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் குழந்தைகள் பாதிப்படைந்து வருகின்றனர். நீண்ட காலமாக இவர்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இதனையடுத்து சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மலைக்குறவர் இன மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். மூங்கில் கூடைகளை முடைந்தபடி தங்களது போராட்டத்தை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து மலக்குறவர் இன மக்கள் தெரிவிக்கையில் சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படாததால் மிகவும் சிரமப்படுவதாகவும், இது குறித்து பலமுறை சட்டமன்ற உறுப்பினரிடம் அரசு துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டதாகவும் தாங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மனுவும் பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாகவும், இதனால் தாங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?