பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி அரசு மருத்துவமனையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அரசு ரூ.50 லட்சம் செலவில் ரத்த வங்கி நிலையம் அமைக்கப்பட்டு அது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக திறக்க கோரியும், அதேபோன்று மேட்டுப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையையும் திறக்க கோரியும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான ரத்த வங்கி நிலையம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையின் முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ரத்த வங்கிக்கு கூடுதலாக ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் வழங்கப்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்த வங்கி நிலையம் தற்போது வரையில் திறக்கப்படாமல் பூட்டிய கிடக்கிறது. இதனால் ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு மேல்பரிந்துரைக்காக அனுப்பப்படுகின்றனர்.

இதனால் விபத்து ஏற்படும் நேரங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது ரத்தம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்தம் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நோயாளிகளுடன் செல்வதற்கும் உடன் இருப்பதற்கும் பொன்னேரி பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்வதால் பொன்னேரி பகுதி மக்களின் நேரம் மற்றும் சென்னை செல்வதற்கான பயணச் செலவு உள்ளிட்டவை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து பொன்னேரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அசோகனிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Tags

Next Story