ஆரணி அருகே பாதையை பயன்படுத்த தடை:கிராம மக்கள் திடீர் மறியல்

ஆரணி அருகே பாதையை பயன்படுத்த தடை:கிராம மக்கள் திடீர் மறியல்
X

ஆரணி அருகே வடக்கு நல்லூரில் பள்ளம் தோண்டி பாதையை மறித்ததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி அருகே 60 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை பயன்படுத்த தடை ஏற்படுத்தியதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே வடக்கு நல்லூர் ஊராட்சியில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 60 ஆண்டு காலமாக வடக்கு நல்லூர் பனப்பாக்கம் சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் அரசு தொடக்கப்பள்ளி அங்கன்வாடி, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை உள்ளிட்ட அரசு அலுவலகம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வடக்கு நல்லூர் பனப்பாக்கம் சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் ஏழுமலை என்பவர் 60 ஆண்டிற்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்த நிலையில் திடீரென்று அவருடைய வாரிசுதாரர் 2006ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து பூந்தமல்லி முன்சிப் கோர்ட் 2022ம் ஆண்டு தீர்ப்பு தங்களுக்கு சொந்தமானது என கூறி வழியினை இன்று காலை மக்கள் பயன்பாட்டில் இருந்த சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்தினார். இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் பெரியபாளையம் புதுவயல் நெடுஞ்சாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேசி இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!