ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்விக்காக, காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியர்

ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்விக்காக, காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியர்
X
ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக பேராசிரியர், பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டுகிறார்.

பாடியநல்லூரில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக பேராசிரியர் ஒருவர் பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரை சேர்ந்தவர் செல்வகுமார், தனியார் கல்லூரி உதவிபேராசிரியர். இவர், ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்காக பள்ளி நடத்தி வருகிறார். இங்கு தற்போது 217 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 80மாணவர்களுக்கு மதிய உணவுடன் கல்வி வழங்கி வருகிறார். இதற்கு நிதி தேவைப்பட்டாலும் யாரிடம் உதவி கேட்பது இல்லை.

விடுமுறை நாட்களில் பேராசிரியர் செல்வகுமார் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பொது இடத்தில் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்கிறார். அவர்கள் விரும்பி வழங்கும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக்காக செலவிட்டு வருகிறார்.

மேலும் தாம் எழுதியுள்ள 59 புத்தகங்களை விற்பனை செய்து அதில் வருமானத்தை மாணவர்களுக்கு செலவிடுகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி திரட்ட பேராசிரியர் செல்வகுமார் வாரம் 2 தினங்களில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். மேலும் இவரது சேவையை பாராட்டி பல்வேறு துறையினர் விருதுகள் வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி