பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை

பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை,  பணம் கொள்ளை
X

பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன  ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர்.

பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன் 37 சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி, மகள் ரக்ஷனா, மகன் முகுந்த குமார் ஆகியோர் நேற்று இரவு வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர்களது வீட்டின் படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகளும், பல கிலோ எடையுள்ள வெள்ளி நகைகளும் ரூ. 16 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்