பழவேற்காடு அரசு மருத்துவமனையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
![பழவேற்காடு அரசு மருத்துவமனையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பழவேற்காடு அரசு மருத்துவமனையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/06/16/1915688-img-20240616-wa0006.webp)
பழவேற்காடு அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு சுற்றி சுமார் 30.க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 15,000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மீனவ கிராம மக்கள் உடல் நலக்குறைவு, விபத்து,பாம்பு கடி, கடலில் தவறி விழுதல் என பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு உள்ள அரசு மருத்துவமனை நம்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி புரட்சி பாரதம் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் நியமிக்க வேண்டும், மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.பழவேற்காடு24 மணி நேரமும் மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வரக்கூடிய நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிர்வழி ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
எனவே இந்த மருத்துவமனையில் இதே நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் எனவே மக்களின் நலனை கருதி தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சனை குறித்து கண்டு கொண்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் உடனடியாக நியமித்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu