தரம் உயர்த்தப்பட்டபின் முதல் தேர்தலை சந்திக்கும் பொன்னேரி நகராட்சி
பைல் படம்.
பொன்னேரி நகராட்சியில் உள்ள, 27,753 வாக்காளர்களுக்காக, 37 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொன்னேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் நகராட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19.ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
பொன்னேரி பேரூராட்சியாக இருந்தபோது, அதில் 18 வார்டுகள் இருந்தன. வார்டு வரையறை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்து மற்றும் குடியிருப்பு கட்டடங்கள், வரிவிதிப்பு ஆகியவற்றின்படி, நகராட்சியை 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. அதில் எஸ்.சி., பொது - 3, எஸ்.சி., பெண்கள் -4, பெண்கள் பொது - 10, பொதுப்பிரிவு -10 என ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜனவரி 10ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தற்போது பொன்னேரி நகராட்சியில் 13,564 ஆண் வாக்காளர்கள், 14,171 பெண் வாக்காளர்கள், 18 இதர என மொத்தம், 27,753 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் குறைந்தபட்சமாக வார்டு எண். 25ல், 604 வாக்காளர்களும், அதிகபட்சமாக வார்டு எண். 9ல் 1,565 வாக்காளர்களும் உள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் விதமாக 37 வாக்குச்சாவடி மைங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக வாக்காளர்கள் உள்ள வார்டுகளில் ஆண், பெண் தனித்தனி என 20 வாக்குச்சாவடி மையங்கள், மற்ற இடங்களில் இருபாலருக்கும் சேர்த்து 17 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu