மீஞ்சூரில் மின்மாற்றியை துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ

மீஞ்சூரில் மின்மாற்றியை துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ
X

மின்மாற்றியை துவக்கிவைத்த பொன்னேரி எம்எல்ஏ.

மீஞ்சூரில் மின்மாற்றியை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திர துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் புதிய மின் இணைப்புகளால், குறைந்த மின் அழுத்த மின்சாரம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.

இதுகுறித்து பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் முறையிட்டதன் பேரில், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 28லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 இடங்களில் 4 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. இதனையடுத்து புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றிகளை எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நான்கு இடங்களில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் பயன்பெறும் வகையில் புதியதாக மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளதால் மின்தடை, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!