பொன்னேரி லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி அருகே நடைபெற்ற லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கண்கவர் நாட்டியம், சிலம்ப கலைகளும் அரங்கேறின.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ லஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மஹாகும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாராயண பெருமாள், ஸ்ரீலஷ்மி அம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாணத்திற்காக மேளதாளம் முழங்க பட்டாச்சார்யார்கள் புடைசூழ லஷ்மி அம்மன் சமேதமாக நாராயண பெருமாள் மணமேடைக்கு வந்தடைந்தார். இதை தொடர்ந்து ஆறு முறை மாலை மாற்றும் சடங்கு நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எம்பெருமான் லஷ்மி அம்மன் சமேதராக வீற்றிருக்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு கெட்டிமேளம் முழங்க ஸ்ரீ லஷ்மி தாயாருக்கு பட்டாச்சார்யார்கள் திருமாங்கல்யத்தை சூட்டினர். இதனை தொடர்ந்து பெருமாள் ஒய்யார ஊஞ்சல் வைபவம் நடந்தேறியது. இதையடுத்து எம்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாண வைபவத்தை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கண்டு களித்து எம்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பிரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டியம் பயிலும் மாணவிகள் சலங்கை அணிந்து ராகம், சுதி, தாளத்தோடு பரதம் ஆடியது காண்போரை கண்கவர்ந்தது. முன்னதாக சிலம்பம், மான்கொம்பு உள்ளிட்டவற்றை சுழற்றி வீரர்கள் அசத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu