பொன்னேரி கொள்ளூர்: ஏழை குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு!

பொன்னேரி கொள்ளூர்: ஏழை  குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு!
X

திமுக சார்பில் ஏழைகளுக்கு உணவு தொகுப்பு வழங்கிய காட்சி.

பொன்னேரி தொகுதி கொள்ளூரில் 150-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொடர் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுகவினர் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட கொள்ளூரில் வாழ்ந்துவரும் 150க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா காலகட்ட நிவாரண உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட உணவு தொகுப்பினை கும்மிடிபூண்டி திமுக முக்கிய பிரமுகர் டி.ஜே தினேஷ் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!