பொன்னேரியில் பா.ஜ. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் பா.ஜ. அரசை கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரியில் பா.ஜ. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது போடபட்டுள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறை மற்றும் அத்துமீறி அடக்கு முறையை பா.ஜ.க. அரசு செய்வதாக கூறியும் இதனை கண்டித்தும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் செயலாளரும் ,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநில துணைத்தலைவர் டி.எல். சதாசிவலிங்கம், பொன்னேரி நகர தலைவர் கார்த்திகேயன், ஆரணி நகர தலைவர், சுகுமாரன், மீஞ்சூர் வட்டார தலைவர் ஜலந்தர்,சோழவரம் வட்டார தலைவர் உமாபதி, உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசுகையில் பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அன்னை சோனிகாந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு பொய் சட்டபடி எதிர்கொள்வோம். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் காங்கிரஸ் கட்சி அஞ்சாது என்றும் விரைவில் பா.ஜ.க அரசுக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். இந்த அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தால் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!