ராமர் கோவில் கும்பாபிஷேக பேனர் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் முற்றுகை

ராமர் கோவில் கும்பாபிஷேக பேனர் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் முற்றுகை
X

முற்றுகைப் போராட்டத்தில்  ஈடுபட்ட பாஜவினர். 

Ponneri Bjp Siege Agitation இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொன்னேரியில் வைக்கப்பட்ட கும்பாபிஷேக பேனரை அகற்றியதை கண்டித்து நகராட்சி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

பொன்னேரியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அயோத்தியில் இன்று நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை பொன்னேரி நகராட்சி சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் நேற்று மாலை அகற்றப்பட்டன. பாஜகவினர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக வைத்திருந்த பேனரையும் அகற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை அறிந்த பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் இதனைக் கண்டித்து பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக வைத்திருந்த பேனரை அகற்றியதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ராமர் கும்பாபிஷேகம் பேனரை அகற்றி குப்பை அள்ளும் வண்டியில் எடுத்து வந்ததை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்திய பாஜகவினரில் இருபிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துணை தலைவர் விஜயகுமார் பாஜகவினரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் பொன்னேரி நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story