/* */

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவக்கம்.

HIGHLIGHTS

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி  பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவக்கம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கும்மமுனிமங்களம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனி இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப்பாடிய வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக விநாயக பெருமானுக்கும், அகத்தீஸ்வர பெருமானுக்கும், ஆனந்தவள்ளி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி சிவாச்சாரியார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகா தீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சிவபெருமான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமான் அகத்தீஸ்வரரை தரிசித்து சென்றனர்.

Updated On: 10 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்