பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா
X
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவில் குதிரை வாகனத்தில் பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.அகத்திய முனிவர் இத்தலத்திற்கு வருகை தந்து சிவபெருமானை போற்றிப்பாடியதால் அகத்தீஸ்வரர் என பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.


இவ்வளவு சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 8ஆம் நாள் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான வெண் குதிரை வாகன வீதிவுலா நடைபெற்றது. முன்னதாக அகத்தீஸ்வரருக்கும் ஆனந்தவல்லி தாயாருக்கும் பால்,தயிர், சந்தனம்,ஜவ்வாது,இளநீர், தேன்,மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசன நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புஷ்பரத ஆராதனை மற்றும் மஹாதீபாராதனை காட்டப்பட்டது.

இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க பார்வதி தேவி முருகன், வள்ளி தெய்வானை சகிதமாக சிவபெருமான் வெண் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.இதனை தொடர்ந்து சிவபெருமான் மேளதாளம் முழங்கிட ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் ஆலயத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?