பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையிலான போலீசார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது ஒரு வீட்டில் இருந்து ஏராளமானோர் சென்று பாக்கெட்களை வாங்கி வருவது தெரியவந்தது/

இதனையடுத்து போலீசார் அந்த வீட்டுக்குள் திடீரென சென்று சோதனை செய்தனர்.அங்கு. பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து இந்த விவகாரத்தில் ஈடுபட்ட. அந்த வீட்டில் 2 பேரை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), ஜவகர் (32) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரிகளிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!