மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் திருத்தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலின் நடைபெற்ற தேரோட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். வடகாஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கடந்த 25-ஆம் தேதி பங்குனி பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில், 7-ஆம் நாளான திருத் தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. 4 மாட வீதிகளில் உலா வந்த தேரை காண பொன்னேரி, பழவேற்காடு, மணலி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, செங்குன்றம், தச்சூர், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இரும்பு வலையங்களால் உருவாக்கப்பட்ட வடத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கைலாச வாத்தியங்கள் முழங்கியும், திருவாசகம் உள்ளிட்ட சிவ புராணங்களை பாராயணம் செய்தும், தேரை வடம் பிடித்து "ஹர ஹர மகாதேவா" என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். முன்னதாக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுனியம் பலராமன், பொன்ராஜா உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
மேலும், இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் காவல்துறை சார்பில் மீஞ்சூர் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu