மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் பயணியர் வசதிகள் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு மனு அளித்தனர்.

மேலும் குறித்த நேரத்தில் புறநகர் ரயில்கள் இயக்கிட வேண்டும். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தினை 4வழி பாதையாக மாற்றிட வேண்டும். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சுகதாரமான குடிநீர் வழங்க வேண்டும். ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அமைக்க வேண்டும். நெல்லுார் விரைவு ரயிலை மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். உணவக வசதி ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story