வளமீட்பு பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அதிகாரியிடம் மனு

இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அரியன்வாயல் வளமீட்பு பூங்காவிற்கு பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய இயக்கங்கள் சார்பில் வளமீட்பு பூங்காவை குறித்து மனு அளித்தனர் அதில் பேரூராட்சி நிர்வாகம் எவரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்று அமைத்து அதை குப்பை கிடங்காக மாற்றுவதற்கான முயற்சியை செய்து வருகிறது.
எனவே அப்பணிகளை உடனே கைவிடுமாறும்,பொதுமக்களுக்கு பிரச்சனை இல்லாத இடத்தில் அதனை மாற்ற வேண்டுமென எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் யூசுப், பொருளாளர் சாயின்ஷா, நகர துணை செயலாளர் நாகூர் கனி, ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழக மீஞ்சூர் கிளை பொறுப்பாளரும்.மாநில மாணவரணி செயலாளர் அப்துல் காதர், மாநில தொண்டர் அணி செயலாளர் ரிஸ்வான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu