கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.
X
ஜனபசத்திரம் கூட்டுச் சாலையில் கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனபதசத்திரம் கூட்டுச்சாலையில் கஞ்சா விற்பதாக சோழவரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தன. தகவல் அறிந்ததும், உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றங்கரை அருகே கஞ்சாவை சிறுசிறு பாக்கெட்களாக போட்டுக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 1கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்பு கஞ்சா விற்ற குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்