பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
X
அழிஞ்சிவாக்கம் அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பூச்சி மருந்து குடித்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிப்பவர் கீதா என்பவரின் கணவர் மணி (50).

நேற்று காலை 7.30 மணியளவில் வீட்டில் காபி குடித்து விட்டு சென்றவர் ஜனப்பஞ்சத்திரம் ஒயின்ஷாப் அருகே மது மற்றும் பூச்சி மருந்தினை குடித்து விட்டு கீழே விழுந்து கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்