பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
X

பழவேற்காடு முகத்துவாரம்.

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக எம்பி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு முகத்துவாரம் விளங்கி வருகிறது. இங்கு நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு பல மாதங்களாக நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தடையில்லா சான்று வழங்கி அதற்கான கடிதத்தை தமக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளதாக திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எனது 3ஆண்டுகள் தொடர் முயற்சியால் புலிகாட் முகத்துவாரம் அமைப்பதற்கு மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதை தொடர்ந்து அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக மீன்வளத்துறை செயலாளர் ஜவஹரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!