பெரியபாளையம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

பெரியபாளையம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை  திறந்து வைத்த எம்எல்ஏ
X

பைல் படம்

பெரியபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இதில் இணைப் பதிவாளர், வேளாண் துறை அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!