தலைமை ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

தலைமை ஆசிரியை  கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!
X

மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை கண்டித்து, பெற்றோர் பள்ளி மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொன்னேரி அருகே அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 100.க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த கிரண் என்ற மாணவர் 8.ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.


இந்நிலையில் மாணவனை தலைமை ஆசிரியை உஷா ராணி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாணவர்களும், பெற்றோரும் பள்ளியின் முன் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவன் கிரண் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இது குறித்து தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறி பெற்றோர், மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர் இது குறித்து மேலிடத்தில் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
why is ai important to the future