மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அரியன்வாயலில் தொடங்கி, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மீஞ்சூர் பஜாரில் என துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மேலும் ரவுடிச செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!