பங்குனி உத்திர திருவிழா: சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு. வேல் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். ஆனால் பங்குனி உத்திரமானது முருகப் பெருமானுடன் மட்டுமல்ல பல தெய்வங்களுடனும் தொடர்புடைய நாளாகும். பல தெய்வ திருமணங்கள் நடைபெற்றதும் இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது உத்திரம். இவை இரண்டு இணைந்து வரும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம்.
தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் என்பதால் பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனாலேயே இதை பங்குனி உத்திர விரதத்திற்கு திருமண விரதம் என்ற பெயரும் உண்டு. முருகப் பெருமான் அனைத்து தெய்வங்களின் ஐக்கியமான சக்தி என்பதால் இது முருகனுக்குரிய விழாவாக நாளடைவில் மாறி போனது. இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா ஏப்ரல் 4 ம் தேதி வருகிறது.
பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி கிராமத்தில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்குடம் எடுத்து கொண்டு பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவர்.
31ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று ஆரணியில் காப்புக் கட்டிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்தர்கள் அலகு குத்திக்கொண்டனர். மேலும் காவடி, எடுத்தும், அலகு குத்திக்கொண்ட பக்தர்கள் ஆரணியில் இருந்து சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். பெண்கள் தங்கள் தலைகளில் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். காவடிகளை, சுமந்தும், அலகு குத்தியும், கூண்டு காவடியை சுமந்தவாறு பக்தர்கள் அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு முருகனை அருள் பெற்றனர். பக்தர்கள் அலகு குத்தி, சரண கோஷங்களுடன் காவடி எடுத்து சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu