ஊராட்சித்தலைவர் கொலை வழக்கு: 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

ஊராட்சித்தலைவர் கொலை வழக்கு:  10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
X
Goondas Act In Tamil- பொன்னேரி அடுத்த கொண்டக்கரை ஊராட்சித்தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் போலீஸார் சிறையிலடைத்தனர்

Goondas Act In Tamil- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த மனோகரன் (40). முன்விரோதம் காரணமாக கடந்த மே மாதம் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரை விசாரணை செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், சுந்தரபாண்டியன், பத்மநாபன் உள்ளிட்ட 10 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 10 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.கொலை வழக்கு ஒன்றில் ஒரே நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், ஆவடி ஆணையரகம் உருவாகி ஒரு ஆண்டில் பல்வேறு குற்ற சமநிலை ஈடுபட்டதில் மட்டும் 88 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!